விளையாட்டாய் சில கதைகள்: உலகின் முதல் விளையாட்டு உபகரணம்
ஹாக்கி விளையாட்டைப் பொறுத்தவரை, வீரர்கள் கைகளாலோ, கால்களாலோ பந்தை தொடக்கூடாது. ஹாக்கி ஸ்டிக் மூலமாகத்தான் பந்தை கோல் எல்லையை நோக்கி நகர்த்த வேண்டும். அந்த வகையில் ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத் தேவையாக ஹாக்கி ஸ்டிக்குகள் விளங்குகின்றன.
உலகிலேயே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உபகரணம் ஹாக்கி ஸ்டிக்காக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எகிப்து நாட்டின் குகைகளில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்களில் ஹாக்கி ஸ்டிக்கின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதே இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் மூங்கில் மரங்களைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment