Posts

Showing posts with the label https://www.hindutamil.in/news/sports/624968-anand-mahindra-announces-thar-suv-as-gifts-for-six-team-india-youngsters-after-historic-series-win-in-australia.html?frm=rss_more_article

ஆஸி.யில் சாதித்த நடராஜன், ஷைனி, தாக்கூர், சுந்தர், கில், சிராஜுக்கு ‘தார்-எஸ்யுவி ஜீப்’ - ஆனந்த் மகிந்திராவின் பரிசு

Image
ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணியில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷுப்மான் கில் ஆகியோருக்கு தார்-எஸ்யுவி ஜீப் பரிசாக வழங்கப்படும் எனத் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.