பொறுமை அவசியம்; இந்திய அணியில் இப்போது சேவாக் இல்லை; கோலிதான் இருக்கிறார்: இங்கிலாந்து வீரர்களுக்கு ஸ்வான் அறிவுரை
இந்திய அணியில் இப்போது வீரேந்திர சேவாக் இல்லை. விராட் கோலிதான் இருக்கிறார். ஆதலால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பொறுமையைக் கடைபிடித்தால் வெற்றி கிடைக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிய இந்தியாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இருடெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.
Comments
Post a Comment