போட்டியின் பாதியிலேயே வெளியேற நடுவர்கள் அனுமதித்தார்கள்; ஆஸி.ரசிகர்கள் அவமானப்படுத்தியபோது என் மனவலிமை அதிகரித்தது: முகமது சிராஜ் பேட்டி
சிட்னி டெஸ்ட்டில் ரசிகர்கள் என்னை அவமானப்படுத்தியபோது, மைதானத்திலிருந்து பாதியிலேயே நான் செல்வதற்கு எனக்கு நடுவர்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், ரசிகர்களின் வார்த்தைகள் என் மனவலிமையை அதிகரித்தது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குத் தேர்வான முகமது சிராஜ், ஆஸ்திரேலியப் பயணத்தில் இருந்தபோது அவரின் தந்தை ஹைதராபாத்தில் காலமானார். ஆனால், ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பி மீண்டும் வரும்போது 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டார்.
Comments
Post a Comment