சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேர்ஸ்டோவுக்கு இந்தியத் தொடரில் ஓய்வு கொடுக்கலாமா? நாசர் ஹூசைன் கேள்வி
இந்திய சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக் கூடிய ஜானி பேர்ஸ்டோவுக்கு இந்திய டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கும் முடிவை இங்கிலாந்து நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோ 47, 35 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார். ஆசியக் கண்டத்தில் சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேர்ஸ்டோவுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுழற்றி முறை விதியின்படி இந்தியத் தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளித்துள்ளது.
Comments
Post a Comment