சவுரவ் கங்குலி உடல்நலனில் பிரச்சினையில்லை: வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி
பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு எந்தவிதமான உடல்நலப்பிரச்சினையும் இல்லை. வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது,திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளி்க்கப்பட்டது. கங்குலியின் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.
Comments
Post a Comment