கடினமாக உழைத்தால் கிரிக்கெட்டில் பிரகாசிக்கலாம்: நடராஜன்
இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் தெரிவித்ததாவது:
"ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பாக விளையாடி தாயகம் திரும்பிய தருணம் மிகவும் நெகழ்ச்சியானது. நாட்டுக்காகவும், நான் பிறந்த சேலம் மண்ணுக்காக பெருமை சேர்த்தமை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது கடவுள் தந்த வரமாக கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு, ஐபிஎல் போட்டிகளில் நான்கு ஆண்டு விளையாடியதில் கிடைத்த அனுபவமே காரணம். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள அனைவரின் கூட்டு முயற்சியே ஆஸ்திரேலியவை வெற்றி கொள்ள காரணம்.
Comments
Post a Comment