இங்கிலாந்து டெஸ்ட்: ரஹானே, ரோஹித் சென்னை வந்தனர்; விராட் கோலி இன்று வருகை
சென்னையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே, ரோஹித் சர்மா இருவரும் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.
இவர்கள் இருவருடன் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் உடன் வந்தார். இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் வைக்கப்பட உள்ளனர். மற்ற வீரர்களான கேப்டன் கோலி உள்ளிட்டோர் இன்று மாலைக்குள் சென்னை வந்தடைய உள்ளனர்.
Comments
Post a Comment