ட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா? By

ஒரு உரையாடல் எப்படி நடந்தது என்பதை பின்னர் யோசித்து பார்ப்பதற்கும், உண்மையாக நடந்த உரையாடலுக்கும் நிச்சயம் சிறு வித்தியாசமாவது இருக்கும். நடந்த உரையாடலை மீண்டும் கேட்டால் ஏற்கனவே செய்த சில தவறுகளை திருத்திக்கொள்ளலாம். சில ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே போன் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், மற்றவற்றில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி மட்டுமே நம்மால் உரையாடல்களை பதிவு செய்ய முடியும். போன் செய்பவர்களின் விவரங்களை அறிவதற்கு உதவும் பிரபல செயலியான ட்ரூகாலர், சமீபத்தில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியை படிப்படியாக அனைவருக்கும் வழங்கிவருகிறது. துருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும். ட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். பட...